உள்ளூர் செய்திகள்
ஆய்வுக் கூடத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இனி தமிழகத்திலேயே உருமாறிய கொரோனாவை கண்டறியலாம்- பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம்

Published On 2021-12-29 14:10 GMT   |   Update On 2021-12-29 14:10 GMT
பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதால், ஆரம்ப நிலையிலேயே உருமாற்றத்தை கண்டறிந்து நோய் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உருமாறிய கொரோனா வைரஸ்களை தமிழகத்திலேயே கண்டறியும் வகையில் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆரம்ப நிலையிலேயே உருமாற்றத்தை கண்டறிந்து நோய் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, உருமாறிய வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு, முடிவுகள் பெறப்படுகின்றன. இதற்கு மிகவும் கால தாமதம் ஆகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News