உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் வழங்க தடை

Published On 2021-12-29 08:36 GMT   |   Update On 2021-12-29 08:36 GMT
ஒரு சிலர் சாதாரண காய்ச்சல் என்று மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாகப்பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளையில் ஒரு சிலர் சாதாரண காய்ச்சல் என்று மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். அவ்வாறு மருந்துகளை உட்கொள்ளும்போது காய்ச்சல் குணமடைந்து விடுகிறது.

ஆனால் மீண்டும் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அது டெங்கு பாதிப்பாக இருக்கலாம். ஆகவே டெங்கு காய்ச்சலை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம்.

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்கள் காய்ச்சலுக்கான மாத்திரைகளை வழங்கக்கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News