உள்ளூர் செய்திகள்
தி.மு.க.வில் இணைந்தவர்களை படத்தில் காணலாம்.

அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்

Update: 2021-12-28 09:21 GMT
ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரராஜன் உட்பட ஏராளமானவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும்., திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரராஜன் உட்பட ஏராளமானவர்கள் தி.மு.க. வில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் போடிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்சவேணி, கவிதா, சித்ரா, நீலாவதி, சபரி, பாலு ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியின் போது உடுமலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் அனிதா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் மொடக்குப்பட்டி ரவி மற்றும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போடிபட்டி ஊராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News