உள்ளூர் செய்திகள்
காய்கறிகள்

காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை அமைக்க மானியம்

Published On 2021-12-27 07:41 GMT   |   Update On 2021-12-27 07:41 GMT
2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன் அமைக்கவேண்டும்.
பல்லடம்:

காய்கறிகளை சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை தரம்பிரித்து சிப்பம் கட்டும் அறை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை 600 சதுர அடியில் அமைக்க வேண்டும்.

2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன் அமைக்கவேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தகநகல், போட்டோ, ஆகியவற்றுடன் பல்லடம் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News