மோகன்குமார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அபிநயாவை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
வெள்ளகோவிலில் தீயில் கருகிய இளம்பெண் உயிரிழப்பு
பதிவு: டிசம்பர் 27, 2021 13:11 IST
கோப்புபடம்
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 34). இவரது மனைவி அபிநயா(25). இவர் கடந்த 11-ந் தேதி இரவு வீட்டில் சமையல் செய்ய கேஸ் அடுப்பை தீக்குச்சியால் பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென அபிநயா அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்து விட்டது.
உடனே இதை கவனித்த கணவர் மோகன்குமார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அபிநயாவை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று இறந்தார்.
அவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :