கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
பதிவு: டிசம்பர் 26, 2021 18:43 IST
கோப்பு படம்
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள போரக்ஸ் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் சென்ற பீகாரை சேர்ந்த தொழிலாளி மனோஜ் குமார் (வயது 25) என்பவரை, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் வழிமறித்தனர். பின்னர் கத்தியால் குத்தி அவரது செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மனோஜ் குமார் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.