உள்ளூர் செய்திகள்
பிரபு

ஆசிய சாம்பியன்சிப் வலுதூக்கும் போட்டி - அவிநாசி கல்லூரி மாணவர் தங்கம் வென்று சாதனை

Published On 2021-12-26 07:20 GMT   |   Update On 2021-12-26 07:20 GMT
சாதனை படைத்துள்ள பிரபு தனது 13 வயதில் இருந்தே வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
அவிநாசி:

அவிநாசி காமராஜர்வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். வலுதூக்கும் வீரர், பயிற்சியாளர். இவரது மகன் பிரபு ( வயது 23). கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் தனது தந்தையிடம் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் வென்று பதக்கங்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபு பங்கேற்று, வலு தூக்கும் போட்டியில் 74வது பிரிவில் 737.5 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு அவிநாசி பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சாதனை படைத்துள்ள பிரபு தனது 13 வயதில் இருந்தே வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று வருகிறார். அகில இந்திய அளவில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். 

பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அவரது தந்தை பாஸ்கரும் வலுதூக்கும் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News