உள்ளூர் செய்திகள்
அரியலூர் வழித்தட ரெயில் சேவையில் வரும் 15-ந் தேதி வரை மாற்றம்

அரியலூர் வழித்தட ரெயில் சேவையில் வரும் 15-ந் தேதி வரை மாற்றம்

Published On 2021-12-25 12:10 GMT   |   Update On 2021-12-25 12:10 GMT
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூர் வழித்தட ரெயில் சேவையில் வரும் 15-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருச்சி:

திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அரியலூர் ரெயில் நிலையத்தில் நாளை முதல் (26-ந் தேதி) வரும் ஜனவரி 15-ந் தேதி வரை அதாவது அடுத்த 21-நட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்திலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஓட்டக்குடி- அரியலூர் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை - குருவாயூர் தினசரி அதிவிரைவு ரெயில் (16127) வரும் 30-ந் தேதி தவிர வரும் ஜனவரி 10-ந் தேதி வரை விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரெங்கம் வழியாக இயக்கப்படாமல் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி ரெயில் நிலையத்தை வந்தடையும்,

குருவாயூர்-சென்னை தினசரி அதிவிரைவு ரெயில் (16128) வரும் ஜனவரி 9-ந் தேதி மட்டும் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும்.

அஜ்மீர்-ராமேசுவரம் வாராந்திர அதிவிரைவு ரெயில் (20973) இன்று (25-ந் தேதி) மற்றும் வரும் ஜனவரி 1, 8 ஆகிய தினங்கள் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரெங்கம் வழியாக இயக்கப்படாமல் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும்.

பிகானீர் - மதுரை வாராந்திர அதிவிரைவு ரெயில் (22632) நாளை (26-ந் தேதி), வரும் ஜனவரி 2-ந் தேதி விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படவுள்ளது.

மதுரை-சென்னை தினசரி அதிவிரைவு ரெயில் (12636) வரும் 30, 31 மற்றும் வரும் ஜனவரி 6-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும். இந்த ரெயில் சென்னை- தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை - காரைக்குடி தினசரி அதிவிரைவு ரெயில் (12605) வரும் 30, 31 மற்றும் வரும் ஜனவரி 6-ந் ேதி ஆகிய நாட்கள் மட்டும் தாம்பரத்திலிருந்து புறப்படும்.

திருச்சி-திருப்பாதிரிப் புலியூர் டெமு ரெயில் (06890) வரும் ஜனவரி 10-ந் தேதியில் திருச்சி ரெயில் நிலையத்திலிருந்து வழக்கமாக புறப்படும் நேரத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

பகத்கீகோதி- திருச்சி அதிவிரைவு ரெயில் வரும் 29-ந் தேதி விருத்தாசலம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் வழக்கமான நேரத்தில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும். லோகமான்ய திலக் முனையம் - மதுரை ரெயில் (22101) வரும் ஜனவரி 5-ந் தேதி விருத்தாசலம் ரெயில் நிலையத்திலிருந்து 75 நிமிடம் தாமதமாகப் புறப்படும். நாகர்கோவில் - சத்ரபதி சிவாஜி முனையம் அதிவிரைவு ரெயில் (16532) வரும் ஜனவரி 6-ந் தேதி திருச்சி ரெயில் நிலையத்திலிருந்து 45 நிமிடம் தாமதமாகப் புறப்படும். சென்னை - மதுரை விரைவு ரெயில் (12635) வரும் ஜனவரி 10-ந் தேதி விருத்தாசலம் ரெயில் நிலையத்திலிருந்து 20 நிமிடம் தாமதமாகப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News