உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசி விற்பனை கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைக்க 5 பைசா மட்டுமே வாடகை கட்டணம்

Published On 2021-12-25 04:12 GMT   |   Update On 2021-12-25 04:12 GMT
விளைபொருளுக்கு முதல் 15 நாட்களுக்கு வாடகை எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
அவினாசி:

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் அவினாசியில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குடோன்கள் உள்ளன.

இவற்றில் பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு வெல்லம், மக்காசோளம், சோளம், கம்பு, ராகி, எள், நெல், மிளகாய், வெங்காயம், தேங்காய், பாக்கு உள்ளிட்ட விளைபொருட்களை இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்று கொள்ள முடியும்.

விளைபொருளுக்கு முதல் 15 நாட்களுக்கு வாடகை எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அதன் பிறகு ஒரு நாளைக்கு குவின்டாலுக்கு (100 கிலோ), 5 பைசா மட்டுமே வாடகையாக வசூலிக்கப்படுகிறது. மஞ்சள் பயிருக்கு மட்டும் 20 பைசா வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து விற்பனைக் கூடத்தினர் கூறுகையில்:

குடோன் வசதியை குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் பலர் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டுள்ளனர்.

குத்தகைக்கு எடுத்தவர்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விளைபொருட்களை விற்று விடுகின்றனர். இருப்பு வைக்க முன் வருவதில்லை. விளைபொருட்களை இருப்பு வைத்து விற்க பழகி  கொண்டால், கூடுதல் விலை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
Tags:    

Similar News