உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

வெள்ளகோவிலில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2021-12-24 10:49 GMT
நிகழ்ச்சியில் தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில், தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சி மூலமாக கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், உடல் நலக் கேடு குறித்து பெண் நடன கலைஞர்கள் பாட்டு பாடியும் நடனமாடியும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம்  மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார்  கலந்து கொண்டனர். விழிப்புணர்வின் போது சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ கள்ளச்சாராயம் விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News