ஆண்களுக்கு திருமண வயது 21? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு விஜயகாந்த் வரவேற்பு
பதிவு: டிசம்பர் 18, 2021 13:42 IST
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
சென்னை:
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாக அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தே.மு.தி.க. வரவேற்பதாக அதன் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஓட்டுரிமை 18 வயது, திருமணம் 21 வயதா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. ஆண்களுக்கு திருமண வயது 21? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய அரசு இது குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்று தமது டுவிட்டர் பதிவில் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :