உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

தடையை மீறி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Published On 2021-12-18 05:09 GMT   |   Update On 2021-12-18 05:28 GMT
சேலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம்:

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றாததாக கூறி அ.தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதையொட்டி சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் உள்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி நடந்ததால் பரபரப்பு நிலவியது.

இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வினர் மீது கூட்டம் கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், தொற்று நோய் பரவ காரணமாக இருத்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News