உள்ளூர் செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமா?- வானிலை மையம் தகவல்

Published On 2021-12-17 05:57 GMT   |   Update On 2021-12-17 08:35 GMT
பனிப்பொழிவை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் குறைவாகவும், உள் மாவட்டங்களில் சற்று அதிகமாகவும் இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

ஆனால் வானிலை மையம் கணித்தபடி தாழ்வு மையம் உருவாகவில்லை.

இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஆகியுள்ளது. அதே நேரத்தில் தாழ்வுப்பகுதி உருவாவதற்கு வாய்ப்பு குறைவாகவும் இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

அதேநேரத்தில் பசிபிக் கடல் பகுதியில் இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் இதுவும் இணைந்து வலுவிழக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கிறது. பனிப்பொழிவை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் குறைவாகவும், உள் மாவட்டங்களில் சற்று அதிகமாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News