உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நிலவரம்: 2-வது நாளாக பாதிப்பு சற்று உயர்வு

Published On 2021-12-16 04:23 GMT   |   Update On 2021-12-16 05:38 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 282 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 343 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,478 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,974 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,006 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 13-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. மறுநாள் 6,984 ஆக உயர்ந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 602 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 282 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 343 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,478 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 7,948 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 87,245 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 60,12,425 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 135 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி, இதுவரை 66.02 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 12,16,011 மாதிரிகள் அடங்கும்.


Tags:    

Similar News