தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடுதல் மற்றும் பராமரிப்புக்காக உடனடி நிதி அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த்,
குமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் 2017 ஆம் ஆண்டிலிருந்து செப்பனிடுதல் பணி எதுவும் நடைபெறாமல் இருப்பதை சுட்டிக் காட்டிய விஜய் வசந்த் இந்த சாலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலை காரணமாக நடைபெறும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடுதல் மற்றும் பராமரிப்புக்காக உடனடி நிதி அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.