உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மதுரை செல்கிறார்

Published On 2021-12-14 07:28 GMT   |   Update On 2021-12-14 11:11 GMT
தமிழக கவர்னரின் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் பயணம் செய்யும் சாலைகள், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.
சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தென்மாவட்டங்களில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 13-ந்தேதி தூத்துக்குடி வந்த அவர் இன்றும், நாளையும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து நாளை (15-ந்தேதி) மதியம் அங்கிருந்து புறப்பட்டு மதுரை வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுலா விருந்தினர் விடுதியில் இரவு அவர் தங்குகிறார்.

மறுநாள் (16-ந்தேதி) காலை 6.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசனம் செய்யும் அவர் கோவிலை சுற்றி பார்க்கிறார்.

அதன் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக் கழத்துக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு நடைபெறும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். தொடர்ந்து பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுடன் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

தமிழக கவர்னரின் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் பயணம் செய்யும் சாலைகள், மீனாட்சி அம்மன் கோவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு, டி.ஐ.ஜி. காமினி, மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Tags:    

Similar News