குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பதிவு: டிசம்பர் 13, 2021 16:07 IST
குடிநீர் தட்டுப்பாடு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சி உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை, எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் சென்று புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.