சென்னை மெரினா, சாந்தோம், வடபழனி, ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை
பதிவு: டிசம்பர் 12, 2021 20:43 IST
மழை
சென்னை
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையை பொருத்தவரை, இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் பரவலாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் இன்று இரவு சென்னை மெரினா, சாந்தோம், வடபழனி, ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறிது நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது.
Related Tags :