உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி.

சாலை வசதிக்காக ரூ.10 லட்சத்திற்கு தனியார் நிலத்தை வாங்கிய பொதுமக்கள்

Published On 2021-12-12 07:33 GMT   |   Update On 2021-12-12 07:33 GMT
எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், செல்வராஜ் ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 20-வது வார்டு  போயம்பாளையம் நேரு நகரில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பிரதான சாலைக்கு செல்ல ஒரு கி.மீ., தூரம் சுற்றி பி.என்., ரோடு மும்மூர்த்தி நகர் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தினால் எளிதாக பஸ் நிலையத்திற்கு சென்றுவிட முடியும் என்ற சூழலில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் இணைந்து 15 அடி அகலம் 152 அடி நீளத்துக்கு தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்க திட்டமிட்டனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், செல்வராஜ் ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்க கட்சி நிர்வாகிகள், தொழில் துறையினர், பொதுமக்கள் இணைந்து நிதி திரட்டினர். அந்நிலத்தை ரூ.10 லட்சம் செலுத்தி, எம்.எல்.ஏ., முன்னிலையில் நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை வாங்கினர்.

இந்நிலம் அதிகாரபூர்வமாக மாநகராட்சி வசம் ஒப்படைப்பதற்கான நிர்வாக ரீதியான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிந்து சாலை ஒப்படைக்கப்பட்ட பின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரோடு அமைத்து தருவதாக எம்.எல்.ஏ., விஜயகுமார் உறுதியளித்துள்ளார்.
Tags:    

Similar News