உள்ளூர் செய்திகள்
கைது

ராதாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

Update: 2021-12-11 10:02 GMT
ராதாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

ராதாபுரத்தை சேர்ந்த மகேஷ் பாபு (22) என்பவர் கடந்த 08-ந்தேதி அன்று தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் இரவு வந்து பார்த்தபோது பைக் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மகேஷ் பாபு ராதாபுரம் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார் உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர்.மேரி, விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற ஆனந்த் (20), மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த கோபி (22) இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News