பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும் இந்தியன் என்ற நிலையிலும் எனது இறுதி அஞ்சலியை அர்ப்பணித்தேன் என விஜய் வசந்த் கூறினார்.
இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் உடலுக்கு விஜய் வசந்த் எம்.பி. அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலிக்கு பின், பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும் இந்தியன் என்ற நிலையிலும் எனது இறுதி அஞ்சலியை அர்ப்பணித்தேன் என விஜய் வசந்த் கூறினார்.