உள்ளூர் செய்திகள்
மனு

ஜோலார்பேட்டை பகுதியில் 2 டாஸ்மாக் கடையை காலி செய்யக்கோரி கட்டிட உரிமையாளர் மனு

Published On 2021-12-06 12:54 GMT   |   Update On 2021-12-06 12:54 GMT
டாஸ்மாக் கடை உள்ள கட்டிடத்தின் உரிமையாளர் பதிவு அஞ்சல் மூலம் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வேலூர் மாவட்ட டாஸ்மாக் நிறுவன அலுவலகத்திற்கு மனு அனுப்பி உள்ளார்.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடை உள்ள கட்டிடத்தின் உரிமையாளர் ஆஞ்சி என்பவரின் மகன் ஆறுமுகம் பதிவு அஞ்சல் மூலம் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வேலூர் மாவட்ட டாஸ்மாக் நிறுவன அலுவலகத்திற்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைக்கும் எனது தந்தை குறைந்த வாடகைக்கு கடையை விட்டுள்ளார். இதனால் எங்களுடைய மற்ற கடைகள் மற்றும் குடியிருப்புகளை வாடகைக்கு விட முடியாமல் உள்ளது. எனது பெயரில் உள்ள கடைகளை இடித்துவிட்டு, புதுக்கடை கட்ட விரும்புவதால் கடைகளை இன்று முதல் 30 தினங்களுக்குள் காலி செய்ய உத்தரவிடும் படியும், அதற்குமேலும் காலம் தாழ்த்தினால் அரசாங்க சொத்து இழப்புக்கு நான் பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News