உள்ளூர் செய்திகள்
மழை

கோவை மாவட்டத்தில் 116 மி.மீட்டர் மழை

Published On 2021-12-06 11:25 GMT   |   Update On 2021-12-06 11:25 GMT
கோவை மாவட்டத்தில் வழக்கமாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பெய்யும் மழை அளவை காட்டிலும் 116.மி.மீட்டர் மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை அளவு தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
கோவை:

கோவை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்று வரை மாவட்டத்தில் 812.8 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளது.
 
வழக்கமாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பெய்யும் மழை அளவை காட்டிலும் 116.மி.மீட்டர் மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை அளவு தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. வருகிற நாட்களில் மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

மாவட்ட முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

அன்னூர் 32.40, வால்பாறை பி.ஏ.பி. 29, வால்பாறை தாலுகா 27, கோவை தெற்கு 18, பெரிய நாயக்கன் பாளையம் 14.80, சூலூர் 11, சின்னக்கல்லாறு 9, மேட்டுப்பாளையம் 4, தமிழ்நாடு வேளாண்மை பல் கலைகழகம் 3, சின்கோனா, ஆழியாறு தலா 2, கோவை விமான நிலையம் 1.8 என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 154 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News