உள்ளூர் செய்திகள்
சிலம்ப போட்டி தொடக்க விழா நடைபெற்ற காட்சி.

உடுமலையில் சிலம்ப போட்டி

Published On 2021-12-06 07:10 GMT   |   Update On 2021-12-06 07:10 GMT
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு சிலம்பத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கணியூர் பகுதியில் தமிழ்நாடு சைலாத் சிலம்பம் சங்கம் நடத்தும் 14-வது மாநில அளவிலான சைலாத் சிலம்பு போட்டிகள் தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து 18 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது . 

போட்டிகளில் வீரர் வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை செய்து காட்டினர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சைலாத் சிலம்பம் மாநில தலைவர் குமரி கணேசன் கூறுகையில், 

தமிழகத்தில் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு சிலம்பத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது போல் பாரம்பரியமான ஆதிகால அடிமுறை கலையான சைலாத் சிலம்பம் முறைக்கும் உரிய அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும் சைலாத் சிலம்பம் போட்டியில் இருந்து தான் கராத்தே, குங்பூ உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகள் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பம் சங்கம் செயலாளர் வீரமணி, கணியூர் அக்சஷரா வித்யா மந்திர் பள்ளி தாளாளர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News