உள்ளூர் செய்திகள்
டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க.வுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை: எடப்பாடி மீது டி.டி.வி.தினகரன் தாக்கு

Published On 2021-12-06 04:49 GMT   |   Update On 2021-12-06 06:59 GMT
அ.ம.மு.க. ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பதாக தொலைக் காட்சிகளில் செய்தி பார்த்தேன்.

பழனிசாமி அன்ட்கம் பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களை தாக்கும் புத்தி எங்களுக்கு கிடையாது. அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற அம்மா துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அ.ம.மு.க. தொண்டர்கள் இவர்களைப் போல மன சாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல.

 


அ.ம.மு.க. ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த தமிழக போலீசாருக்கே இந்த உண்மை தெரியும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஊட்டியில் சுற்றுலா விழா நடத்தப்படும்- சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

Tags:    

Similar News