உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொரோனா வார்டில் பணியாற்றியவர்கள் விவரம் சேகரிப்பு பணி தீவிரம்

Published On 2021-12-05 07:29 GMT   |   Update On 2021-12-05 07:29 GMT
வார்டுகளில் பணியாற்ற டாக்டர், செவிலியர் அடங்கிய மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

கர்நாடக மாநிலத்தில் 2பேருக்கு  ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக ‘தனிமைப்படுத்துதல் சிறப்பு வார்டு’ அமைக்கப்பட்டு  படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் பணியாற்ற டாக்டர், செவிலியர் அடங்கிய மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கடந்த  2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலை மற்றும் நடப்பாண்டு இரண்டாம் அலையின் போது கொரோனா வார்டில் பணியாற்றியவர் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னெச்சரிக்கையாக, மருத்துவமனை பணியில் இருப்பவருக்கு வறட்டு இருமல், லேசான காய்ச்சல், உடல் மற்றும் தசைவலி, தொண்டை கரகரப்பு, வயிற்றுபோக்கு, கண்சிவத்தல் உள்ளிட்ட உடல்நல குறைபாடுகள் உள்ளதா?, அப்படி இருப்பின் அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News