உள்ளூர் செய்திகள்
பனிமூட்டம் (கோப்பு படம்)

சென்னையில் கடும் பனிப்பொழிவு- அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் திணறல்

Published On 2021-12-05 04:55 GMT   |   Update On 2021-12-05 04:55 GMT
அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் அதிகாலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் மழை ஓய்ந்த நிலையில் பனிப்பொழிவு ஏற்பட தொடங்கி உள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.

டிசம்பர் மாத மத்தியில் பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் தற்போது மழை ஓய்ந்து பகலில் கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது.


இந்தநிலையில் பனிப்பொழிவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் அதிகாலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், காதுகளை மூடும் வகையிலான குல்லாக்களை அணிந்து கொண்டு நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது, ‘‘பொதுவாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கி விடும். சில நேரங்களில் தாமதமாகவோ, அல்லது முன்கூட்டியோ பனிப்பொழிவு இருக்கும். வடகிழக்கு பருவமழை வருகிற 31-ந் தேதி வரை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சென்னையில் மழை குறைந்து, பகலில் வெயில் அடிப்பதால் அதிகாலை பனிப்பொழிவு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.


இதையும் படியுங்கள்... ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார மையம்

Tags:    

Similar News