உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா -மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2021-12-04 12:41 GMT   |   Update On 2021-12-04 12:41 GMT
வேலூர் மாவட்டத்தில் நவம்பர் இறுதியில் 93 ஆக இருந்த தொற்று இம்மாத முதல் வாரத்தில் 128 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில்
3 மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக  தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் நவம்பர் இறுதியில் 93 ஆக இருந்த தொற்று இம்மாத முதல் வாரத்தில் 128 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த 3 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News