உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி- உடுமலை சோதனைச்சாவடியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

Published On 2021-12-04 08:03 GMT   |   Update On 2021-12-04 08:03 GMT
உடுமலை சின்னாறு மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடிகளில் கடந்த 1 ருடங்களாக வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 

உடுமலையில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள், இறைச்சி கோழிகள், முட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. 

இதையடுத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களை கண்காணிக்க உடுமலை ஒன்பதாறு மற்றும் சின்னாறு பகுதியில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கேரள- தமிழக எல்லையில் அமைந்துள்ள உடுமலை சின்னாறு மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடிகளில் கடந்த 1 வருடங்களாக வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக வனத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகன சோதனையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் தெர்மல் ஸ்கேனர் கருவியின் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் உடலில் அதிகமாக வெப்பம் இருந்தால் வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  

இந்தநிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளதால் கேரளாவில் இருந்து உடுமலை வரும் வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை தொடர்பான பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களை போலீசார் கேரளாவுக்கே திருப்பி அனுப்புகின்றனர். மேலும் வாகனங்களில் கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News