உள்ளூர் செய்திகள்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் கட்டுமான தொழிலாளர்கள் மறியல் - 50 பேர் கைது

Published On 2021-12-03 10:14 GMT   |   Update On 2021-12-03 10:14 GMT
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

மத்திய அரசு கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், மாநில அரசு நலவாரிய செயல்பாட்டை சீர் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக இந்திய கட்டுமான சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினர் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News