உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டம், குழாய் பதிப்பில் நீடிக்கும் இழுபறி - தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2021-12-02 04:58 GMT   |   Update On 2021-12-02 04:58 GMT
மடத்துப்பாளையம் சாலையோரம் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. குழாய் பதிக்கப்படும் இடம் தனக்கு சொந்தமானது எனதனியார் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்.
அவிநாசி:

அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திட்டப்பணியை முடித்து வெள்ளோட்டம் பார்க்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

தண்ணீர் செறிவூட்டப்பட உள்ள குளம், குட்டைகளுக்கு குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. இந்த மெகா திட்டத்தில் அவிநாசி பேரூராட்சி எல்லைக்குட்பட்டு மட்டும் சங்கமாங்குளம், தாமரைக்குளம் மற்றும் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள குட்டை உட்பட 2 குட்டைகளில் தண்ணீர் செறிவூட்டப்பட உள்ளது.

இப்பணிக்கு பேரூராட்சி எல்லைக்குள் 5.8 கி.மீ., தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், மடத்துப்பாளையம் சாலையோரம் குழாய் பதிக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மடத்துப்பாளையம் சாலையோரம் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. குழாய் பதிக்கப்படும் இடம் தனக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார். சற்று தள்ளி குழாய் பதிக்க முயற்சிக்கும் போது அங்குள்ள தனியார் சிலர் அந்நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி குழாய் பதிக்க ஆட்சேபம் தெரிவிக்கின்றார்

இவ்வாறான இடையூறால் தான் பணி தாமதமாகிறது. அப்பகுதியில் குழாய் பதித்துவிட்டால் பேரூராட்சி பகுதியில் கிட்டதட்ட பணிகள் முடிந்துவிடும். இப்பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மடத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து செம்பாகவுண்டம்பாளையம் பகுதிக்கு செல்லும் குறுகலான ரோட்டை விரிவுப்படுத்த கடந்த 2 ஆண்டுக்கு முன் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.73 லட்சம்  நிதி பெறப்பட்டது.

ஆனால் சிலரின் ஆட்சேபனையால் திட்டம் கைவிடப்பட்டு நிதி திரும்ப சென்றது. அதே போன்றதொரு நிலை தற்போது அத்திக்கடவு குழாய் பதிக்கும் போது ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தீர்வு கண்டு உடனடியாக குழாய் பதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News