உள்ளூர் செய்திகள்
வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்

Published On 2021-12-02 04:22 GMT   |   Update On 2021-12-02 04:22 GMT
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மண்டலமாகவும், பின்னர் புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.  இது, இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மண்டலமாக மாறிய பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் 'ஜாவத்' புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி அன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்
Tags:    

Similar News