உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மாணவர்கள் மூலம் பள்ளிகளில் மூலிகை செடிகள் வளர்ப்பு

Published On 2021-12-02 04:05 GMT   |   Update On 2021-12-02 04:05 GMT
மரக்கன்று நட்டு மாணவருக்கு ஒரு மரத்தை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

இயற்கை சூழலில் மாணவர் கள் கல்வி கற்க ஏதுவாக திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. 

பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, அரிய வகை மூலிகை பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள உதவும் வகையில் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் மரக்கன்று நட்டு மாணவருக்கு ஒரு மரத்தை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக அரிய வகை மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இணைந்த கரங்கள் தன்னார்வ அமைப்பின் உதவியுடன் திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்கப்படுகிறது. 

பள்ளியில் இதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு தூய்மை செய்யும் பணியை தன்னார்வலர்கள் தொடங்கினர். 

இதுகுறித்து இணைந்த கரங்கள் ஒருங் கிணைப்பாளர் துரைராஜ் கூறுகையில்:

மூலிகை தோட்டம், நாட்டு ரக காய்கறிகள் அமைப்பதன் மூலம் மாணவர்களுக்கு நம் பாரம்பரியத்தையும், அவற்றின் பயன்களையும் எடுத்து கூற உள்ளோம். 

இதில் துளசி, கற்றாழை, தும்பை, துத்தி, சிறியாநங்கை, பெரியாநங்கை, தூதுவளை, நெருஞ்சி உள்பட பல்வேறு மூலிகை செடிகள் வளர்த்து அதன் அறிவியல் பெயரை பார்வைக்கு வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். 

தொடர்ந்து ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பயிற்சி வழங்க உள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் வீட்டிலேயே மூலிகை செடிகளை நட்டு பயன்பெறலாம் என்றார்.
Tags:    

Similar News