உள்ளூர் செய்திகள்
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

திருப்பூர் புஷ்பா நகரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த செல்வராஜ் எம்.எல்.ஏ - உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு

Published On 2021-12-01 09:32 GMT   |   Update On 2021-12-01 09:32 GMT
மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.
திருப்பூர்:

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் வார்டு வாரியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அந்த குறைகளை உடனுக்குடன் சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். 

அதன்படி இன்று காலை திருப்பூர்-காங்கேயம் ரோடு நகர் பகுதியில் இன்று ஆய்வு பணி மேற்கொண்டார். ஆய்வின்போது அந்தப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

அந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ. செல்வராஜ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக போனில் தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக செய்து கொடுக்க உத்தரவிட்டார். 

அதைப்போல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அவர் அரசிடம் இதுகுறித்து பேசி கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். 

ஆய்வில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News