உள்ளூர் செய்திகள்
வெள்ளம் பாதித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று 2-வது நாளாக ஆய்வு

Published On 2021-12-01 07:57 GMT   |   Update On 2021-12-01 07:57 GMT
ஒக்கியம் மேட்டில் உள்ள காரப்பாக்கம் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை:

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந்தேதி முதல் பார்வையிட்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அவர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.

நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், ஒக்கியம் மேட்டில் உள்ள காரப்பாக்கம் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.



இந்த நிலையில் இன்று 2-வது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மஞ்சேரி பகுதியில் ஆய்வு செய்தார். செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 4-வது குறுக்கு தெருவில் ஏராளமான மக்களுக்கு உணவு வழங்கினார். செம்மஞ்சேரி - குமரன் நகர் செல்லும் சாலையில் அலமேலுமங்காபுரம் பகுதியில் சென்று மக்களை பார்வையிட்டார்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 15-வது மண்டல சிறப்பு கண்காணிப்பு அதிகாரி வீரராகவ ராவ், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த ரமேஷ் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News