உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மழையால் நோய் பாதிப்பு, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் - மருத்துவ அதிகாரி பேட்டி

Published On 2021-12-01 07:13 GMT   |   Update On 2021-12-01 07:13 GMT
மருத்துவரிடம் முறையாக பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
திருப்பூர்:

தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் முற்றிலும் குறைந்து வரும் நிலையில் இதுபோன்ற பாதிப்புகள் பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி கூறுகையில்:

இது மழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அடிக்கடி வருவது இயல்பு. வழக்கத்தை காட்டிலும் அதிக மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி, கொசு புழுக்கள் உற்பத்தியாகி இதுபோன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே இது சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. மருத்துவரிடம் முறையாக பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 

மாவட்டத்துக்கு உட்பட்ட பல இடங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளன. எனவே உள்ளாட்சி அமைப்புகள் தாமதிக்காமல் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்துதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
Tags:    

Similar News