உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நூல் விலையை கட்டுப்படுத்த கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் - திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

Published On 2021-12-01 06:33 GMT   |   Update On 2021-12-01 06:33 GMT
விலையை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலான ஜவுளி துறை கடுமையாக பாதிக்கப்படும்.
திருப்பூர்:

பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் கடந்த 26-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டுமென மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ்கோயலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் நூல் விலை உயர்வால் ஆயத்த ஆடை ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலான ஜவுளி துறை கடுமையாக பாதிக்கப்படும். பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில்:

பின்னலாடை துறையினரின் போராட்ட குரலுக்கு செவிசாய்த்து பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என, மத்திய ஜவுளி அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம் என்றார்.
Tags:    

Similar News