உள்ளூர் செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ்

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது

Update: 2021-11-30 20:35 GMT
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்  உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு  ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. 

Tags:    

Similar News