செய்திகள்
கோப்புப்படம்

மழை வெள்ளம்: சென்னையில் எந்தெந்த சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்- முழு விவரம்

Published On 2021-11-30 11:13 GMT   |   Update On 2021-11-30 11:13 GMT
சென்னையில் மாலை 4 மணியளவில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போக்குவரத்து காவல் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இன்று காலை சில இடங்களில் மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூறியிருப்பதாவது:-

நீர் தேங்கியுள்ள சாலைகள் மற்றும் மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:-

மாம்பலம்- ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை– போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி உள்ளதால்- போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கே.கே. நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மெகாமார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

வாணி மஹால் முதல் பென்ஸ்பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. 
இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது, மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

அசோக்நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.

இவ்வாறு அறிக்கையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News