செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் துளசி விலை சரிவு

Published On 2021-11-30 04:03 GMT   |   Update On 2021-11-30 04:03 GMT
சந்தைக்கு மூட்டை மூட்டையாக துளசி வருவதால் அதன் விலை குறைந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை, முல்லை, அரளி வரத்து ஒரு புறம் இருந்தாலும் மாலையுடன் சேர்த்து கட்டுவதற்கு துளசி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. துளசியை தனியே பயிரிட்டு விவசாயிகள் அதிகளவில் வளர்ப்பதில்லை.

ஆங்காங்கே தானாக காடுகளில் முளைக்கும் துளசியை பறித்து மூட்டையாக கட்டிக் கொண்டு வந்து பெண்கள் வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். தற்போது துளசி பல இடங்களில் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. 

இதனால் சந்தைக்கு மூட்டை மூட்டையாக துளசி வருவதால் பிடி 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட துளசி, 2 பிடி 10 ரூபாய் என விலை குறைந்துள்ளது.இதனால் பூஜைக்கு பக்தர்கள் அதிக அளவில் துளசியை வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News