செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

உடைப்பு ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய வேண்டும் - த.மா.கா. வலியுறுத்தல்

Published On 2021-11-29 09:40 GMT   |   Update On 2021-11-29 09:40 GMT
திருப்பூர் மாநகரின் பனியன் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை ஏற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் காந்திநகரில் கட்சி தலைமை அலுவலகமான மூப்பனார் பவனில்  கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். 

மாநில செயலாளர் சேதுபதி முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஈரோடு சந்திரசேகர் கொடியேற்றி, சிறப்புரையாற்றி இனிப்புகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பூர் மாநகரின் பனியன் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை ஏற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். 

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் அனைத்து சாலைகளும் சேதமடைந்திருப்பதுடன், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் சீராக இல்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலைகளை சீரமைத்து உடைப்பு ஏற்பட்ட குழாய்களை சரிசெய்து, குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெற்று போட்டியிடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News