செய்திகள்
அய்யப்பன் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

திருப்பூர் கோவிலில் அய்யப்பன் ஆராட்டு நிகழ்ச்சி

Published On 2021-11-29 09:30 GMT   |   Update On 2021-11-29 09:30 GMT
மாலை ஈஸ்வரன் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம், கொடி இறக்குதல், உற்சவம், நிறைவு பூஜைகள் நடக்க உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 62வது ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 17-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந்தேதி பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் மண்டல பூஜை உற்சவ கொடியேற்றம் நடந்தது. 

நேற்று மகா கணபதி ஹோமம், நவகலச அபிஷேகம், பறையெடுப்பு, தாயம்பகை மேளம் ஆகியவை நடந்தன.பறையெடுப்பில் நெல், அரிசி, பூ, நாணயம், தேங்காய், மஞ்சள், அவல் ஆகிய பொருட்கள் கொண்டு நிறைபடி வைத்து வழிபாடு செய்தனர். 

இன்று விஸ்வேஸ்வரா பெருமாள் கோவிலில் அய்யப்பன் ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரு மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் குளத்தில் ஆராட்டுநடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை ஈஸ்வரன் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம், கொடி இறக்குதல், உற்சவம், நிறைவு பூஜைகள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News