செய்திகள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி.

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- திருப்பூரில் சீமான் பேட்டி

Published On 2021-11-27 11:24 GMT   |   Update On 2021-11-27 11:24 GMT
திருப்பூரில் பல இடங்களில் பனை விதை நடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.
திருப்பூர்: 

நாம் தமிழர் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் 67-வது பிறந்தநாளையொட்டி 67 பேர் கண் தானம் மற்றும் ரத்ததானம் செய்கின்றனர். 

மாலை 3 மணக்கு நிமிர்வு பறையிசை முழக்கம், 4 மணிக்கு சமர்ப்பா இன எழுச்சிப் பேரிசை நடைபெற்றது. மாலை 5.50 மணிக்கு புலிக்கொடி ஏற்றப்படுகிறது. 6.05 மணிக்கு நினைவொலி எழுப்புதல், 6.07 மணிக்கு அகவணக்கம், ஈகைச்சுடர் ஏற்றம் மற்றும் மாவீரர் பாடல்கள் பாடப்படுகிறது. 

மாலை 6.50 மணிக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மாவீரர் நாள் உரையாற்றுகிறார். தொடர்ந்து திருப்பூரில் பல இடங்களில் பனை விதை நடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. 

நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கின்றனர். முன்னதாக திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று மதியம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய நாள் தமிழர் இன வரலாற்றில் மறக்கமுடியாத மாவீரர் நாளாகும். தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக தங்களது உயிரிகளை தியாகம் செய்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை போற்றும் நாளாகும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழ் இன மக்கள் இந்த நாளை போற்றி வருகின்றனர். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் வேண்டும் என்றே கிடப்பில் போட்டு வருகிறார். காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கொள்கை மாறுபாடு கிடையாது. 

தமிழ் இனத்துக்கும், உரிமைக்கும், உணர்வுக்கும் எதிராகத்தான் இருப்பார்கள். தமிழகத்தில் ஆளுநர்தான் ஆட்சியை நடத்துவதுபோல் தெரிகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை கூட ஆளுநரின் ஆணைக்கிணங்க என்று தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News