செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்.

தாராபுரத்தில் கடைகளில் பதுக்கி விற்பனை 90 கிலோ போதை பொருட்களுடன் 5 பேர் கைது

Published On 2021-11-27 09:13 GMT   |   Update On 2021-11-27 09:13 GMT
தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரூ.5லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைபொருட்களான பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களின் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதனை தடுக்க போலீ சார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அப்போது தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரூ.5லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் அதனை பதுக்கி வைத்து விற்ற தாராபுரத்தை சேர்ந்த ஷேக் (வயது 33), ஜாபர் அலி(23), பழனி சாலை ஒட்டன்சத்திரம் பிரிவு அருகே டீ ஸ்டால் நடத்திவரும் துரைசாமி (40), அன்வர் (39), அபுபக்கர் சித்திக் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 

மேலும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடை த்தனர்.
Tags:    

Similar News