செய்திகள்
புரசைவாக்கம் தாணா தெருவில் மழை நீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியபோது எடுத்த படம்.

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழை- சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை

Published On 2021-11-27 04:17 GMT   |   Update On 2021-11-27 04:17 GMT
கனமழை, அதி கனமழை காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 620 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்பு சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அக்டோபர் 25-ந் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்துவருகிறது. 26-ந் தேதி வரை (நேற்று) 580.84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது, சராசரி மழையளவான 341.33 மில்லி மீட்டரைவிட 70 சதவீதம் கூடுதல் ஆகும்.

கனமழை, அதி கனமழை காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 620 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அரியலூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 152 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 637 குடிசைகள் பகுதியாகவும், 44 குடிசைகள் முழுமையாகவும், 120 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News