செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

மதுரை கோட்டத்தில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் இணைப்பு

Published On 2021-11-26 10:35 GMT   |   Update On 2021-11-26 10:35 GMT
மதுரை கோட்டத்தில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை:

மதுரையில் கொரோனாவுக்கு முன்பு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்த பிறகு, அவை முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டு விட்டன.

பொதுமக்கள் முன்பதிவு செய்தால் தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் சில நாட்களுக்கு முன்பு வைகை, பல்லவன், அந்தியோதயா உள்பட 5 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அதன்படி மதுரை கோட்டத்தில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரெயில்களில் தலா 3 பெட்டிகளும், தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா விரைவு ரெயிலில் 6 பெட்டிகளும், நெல்லை - பாலக்காடு பாலருவி விரைவு ரெயில்களில் 4 ரெயில் பெட்டிகளும், மதுரை-புனலூர் ரெயிலில் 4 ரெயில் பெட்டிகளும் இரு மார்க்கங்களிலும் இணைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News