செய்திகள்
கோப்புபடம்

ஜி.எஸ்.டி., வரி, மூலப்பொருள் விலை உயர்வு - ஜே.பி., நட்டாவிடம் திருப்பூர் பின்னலாடை துறையினர் மனு

Published On 2021-11-25 07:22 GMT   |   Update On 2021-11-25 07:22 GMT
ஆயத்த ஆடை, பிரின்டிங், டையிங் ஜாப்ஒர்க் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி வரும் ஜனவரி மாதம் முதல் 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் வந்த பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி., நட்டாவை ஷெரீப் காலனியில் உள்ள முன்னாள் எம்.பி., சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில் திருப்பூர் பின்னலாடை துறையினர் சந்தித்தனர். 

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் பழனிசாமி, இணை செயலாளர் செந்தில்குமார், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் ஆகியோர் நட்டாவை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் வசதிக்காக குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். ஆயத்த ஆடை, பிரின்டிங், டையிங் ஜாப்ஒர்க் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி வரும் ஜனவரி மாதம் முதல் 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. உள்ளாடை ரகங்களுக்கு நடைமுறையில் உள்ள 5 சதவீத வரி விகிதம் தொடர வேண்டும்.

இதர ஆடைகளுக்கு மட்டும் 12 சதவீத வரி விதிக்கலாம். மூலதனம் பெருமளவு முடங்கும் என்பதால் பிரிண்டிங், ஜாப்ஒர்க் சேவைக்கான வரியை 12 சதவீதமாக உயர்த்த கூடாது. 

5 சதவீதமாக தற்போதைய விகிதத்திலேயே தொடர  செய்ய வேண்டும். மூலப்பொருளான பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News