செய்திகள்
கோப்புபடம்.

மின் பணியாளர்கள் பற்றாக்குறையால் பராமரிப்பு பணிகள் பாதிப்பு-காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Published On 2021-11-23 07:59 GMT   |   Update On 2021-11-23 08:45 GMT
உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட மின் பகிர்மான வட்டத்தில் ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களிலும் போர் மேன்கள் தங்கள் வசதிக்காக தற்காலிக ஊழியர்களை நியமித்து கொள்கின்றனர்.
உடுமலை:

தமிழக மின்வாரியத்தில் களப்பிரிவு கணக்கீட்டுப் பிரிவு , வருவாய் பிரிவு, தொழில்நுட்பப்பிரிவு என மொத்தம் பிரிவுகளிலும் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பணியாளர்கள் உள்ளனர். அதில் பல ஆண்டுகளாக வயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

பழுது நீக்கம், பராமரிப்பு கண்காணிப்பு மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகள் முடங்கி விடுகின்றன. உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட மின் பகிர்மான வட்டத்தில் ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களிலும் போர்மேன்கள் தங்கள் வசதிக்காக தற்காலிக ஊழியர்களை நியமித்து கொள்கின்றனர். 

அவர்கள் மின்வாரிய வரையறை மற்றும் கட்டுப்பாட்டுக்குள் நேரடியாக வருவது கிடையாது. எனவே பிரிவு அலுவலகங்களில் காலியாக உள்ள வயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 

பிரிவு அலுவலகங்களில் வயர் மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்தால் பழுது நீக்கும் பணி தடைபடுகிறது.

குறிப்பாக வீட்டு மின் இணைப்பு பதிவுகள் சீரமைத்தல், விவசாய நிலத்தை சீரமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. களப்பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் நுகர்வோர் மற்றும் மின் வாரியமும் பாதிக்கிறது என்றனர்.
Tags:    

Similar News