செய்திகள்
கோப்புபடம்.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2021-11-22 10:56 GMT   |   Update On 2021-11-22 10:56 GMT
பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பூர்:

அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2021-22-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித்தேர்வர்களும் (முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் மிதிதி பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம்.

அனைத்து தனித்தேர்வர்களும் வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதிக்குள் திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணை யதளத்தில் வருகிற 3-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு தனித்தேர்வர்கள் வருகிற 3-ந்தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News