செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாநகராட்சியில் வார்டுகளின் எண்கள் மாற்றம்

Published On 2021-11-22 10:14 GMT   |   Update On 2021-11-22 10:14 GMT
திருப்பூர் மாநகராட்சியில் தற்போதுள்ள 60 வார்டுகளில் எண்கள் மட்டும் மாறியுள்ளது. பெரும்பாலான வார்டுகளின் எல்லைகள் மாறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படுமென அரசியல் கட்சியினர் பரபரப்பாகியுள்ளனர். 

மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி தேர்தலுக்காக  வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளது.அ.தி.மு.க.,வில் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளதால் பழைய மற்றும் புதிய வார்டு பட்டியலை பெற்று வேட்பாளர் தேர்வு பணி வார்டு வாரியாக நடந்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் தற்போதுள்ள 60 வார்டுகளில் எண்கள் மட்டும் மாறியுள்ளது. பெரும்பாலான வார்டுகளின் எல்லைகள் மாறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி பழைய வார்டு, புதிய வார்டு பட்டியலை வைத்து கட்சியினர் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

புதிய - பழைய வார்டு (அடைப்பு குறிக்குள்) விவரம்:- புதிய வார்டு1 ( பழைய வார்டு 3), 2(16), 3 (17), 4(19), 5(18), 6(21), 7(20), 8(30), 9(4), 10(2), 11 (1), 12 (15), 13(11), 14(5 மற்றும் 6வது வார்டுகள்), 15 (7), 16(29), 17(28), 18(22), 19(27), 20 (26).வார்டு 21(9), 22(8), 23(10), 24 மற்றும் 28 (13), 25(14), 26 மற்றும் 27 (12), 29(47), 30(25), 31(24), 32(23), 33(33), 34(32), 35(31), 36(48), 37(46) , 38 (60), 39(59), 40(58), 41(57), 42(56), 43(49),வார்டு 44(45), 45(44), 46(34), 47(35), 48 (38 , 49) (39 மற்றும் 40), 50(52), 51(42), 52 (50), 53(54) மற்றும் (55), 54 (53), 55 (51), 56(41), 57(52), 58(37), 59(36), 60(36).

பழைய 5 மற்றும் 6வது வார்டுகளை ஒருங்கிணைத்து, புதிய 14-வது வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. பழைய 24 மற்றும் 28 வது வார்டுகளை ஒருங்கிணைத்து  13-வது வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.பழைய 39 மற்றும் 40-வது வார்டுகளை ஒருங்கிணைத்து 49-வது வார்டு, பழைய 54 மற்றும் 55-வது வார்டுகளை ஒருங்கிணைத்து 53-வது வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பழைய 12-வது வார்டு, தற்போது 26 மற்றும் 27-வது வார்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் கூறுகையில்,கடந்த தேர்தலுக்கு பிறகு 2018-ல் வார்டு சீரமைப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. சில வார்டுகளை தவிர்த்து பெரும்பாலான வார்டு எல்லைகள் மாறவில்லை. 

மாநகராட்சியில் இருந்து கிடைத்த வார்டு பட்டியல் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் இட ஒதுக்கீடு விவரம் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றனர்.
Tags:    

Similar News